சீவக சிந்தாமணி 976 - 980 of 3145 பாடல்கள்
976. என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி
இன் உயிர் இவளைக் காக்கும் அன்று எனில் என்கண் மாய்ந்தால்
பின்னைத் தான் ஆவது ஆக என்று எண்ணிப் பிணை கொள் நோக்கி
மின்னுப் போல் நுடங்கி நின்றாள் வீததை பொன் கொம்பு ஒப்பாள்
விளக்கவுரை :
977. மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால்
அணி இருங் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து
தணி அருந் தோழர் சூழத் தாழ் குழை திருவில் வீசப்
பணி வரும் குருசில் செல்வான் பாவையது இடரைக் கண்டான்
விளக்கவுரை :
[ads-post]
978. பெண் உயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்வில் சாதல்
எண்ணினன் எண்ணி நொய்தா இனமலர் மாலை சுற்றா
வண்ணப் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா
அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே
விளக்கவுரை :
979. குண்டலம் குமரன் கொண்டு குன்றின்மேல் விழும் மின்போல்
ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒலித்து வீழ
மண்டில முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க
விண்டலர் கண்ணி சிந்த மின்னில் சென்று எய்தினானே
விளக்கவுரை :
980. படம் விரி நாகம் செற்றுப் பாய் தரு கலுழன்போல
மடவரல் அவளைச் செற்று மதக் களிறு இறைஞ்சும் போழ்தில்
குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து
உடல் சினம் கடவக் குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான்
விளக்கவுரை :