சீவக சிந்தாமணி 946 - 950 of 3145 பாடல்கள்
946. உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து
இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம் பத அமிர்தம் உண்டால்
பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே
விளக்கவுரை :
947. மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும்
நினைத்திடு நின்கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி
எனைப் பகல் தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு
அனைப் பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
948. பாடு பாணி முகம் எனும் பான்மையின்
ஓடி ஆங்கு ஓர் உயர் வரை உச்சிமேல்
கூடிக் கோலம் குயிற்றிப் படம் களைந்து
ஆடு கூத்தரின் ஐ எனத் தோன்றினான்
விளக்கவுரை :
949. ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர்க்
கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல்
வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு
ஆயினார் பரியாளம் அடைந்ததே
விளக்கவுரை :
950. மிடைந்த மா மணி மேகலை எந்து அல்குல்
தடம் கொள் வெம் முலைத் தாமரை வாள் முகத்து
அடைந்த சாயல் அரம்பையர் தம் உழை
மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான்
விளக்கவுரை :