சீவக சிந்தாமணி 931 - 935 of 3145 பாடல்கள்
931. நீலத் துகிலில் கிடந்த நிழல் ஆர் தழல் அம்மணிகள்
கோலச் சுடர்விட்டு உமிழக் குமரி அன்னம் குறுகிச்
சால நெருங்கிப் பூத்த தடம் தாமரைப் பூ என்ன
ஆலிச் சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின்
விளக்கவுரை :
932. வடிக் கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள்
ஒடிக்கச் சுடர் விட்டு உமிழ உழை அம் பிணை ஒன்று அணுகிக்
கொடிப் புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்பத்
தொடிக் கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின்
விளக்கவுரை :
[ads-post]
933. இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன்
கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில்
சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான்
நவைஇல் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம்
விளக்கவுரை :
934. அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுக் குவாலினை
வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டு அவர்
உய்ந்து இனிப் போதி எனக் கனன்று ஓடினர்
சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார்
விளக்கவுரை :
935. கல்லொடு வன்தடி கையினர் காற்றினும்
வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகிக்
கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்
வல்வினையார் வலைப் பட்டதை அன்றே
விளக்கவுரை :