சீவக சிந்தாமணி 916 - 920 of 3145 பாடல்கள்
916. விடாக் களி வண்டு உண விரிந்த கோதையர்
படாக் களி இள முலை பாய விண்ட தார்க்
கடாக் களிற்று எறுழ் வலிக் காளை சீவகன்
அடாக் களியவர் தொழில் காண ஏகினான்
விளக்கவுரை :
917. ஒன்றே உயிரை உடையீர் ஒருவிப் போமின் இவள் கண்
அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது
என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்பப்
பொன் தோய் கொடியின் நடந்து புனல் சேர்பவளைக் காண்மின்
விளக்கவுரை :
[ads-post]
918. அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை அதனை
நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடுங் கண் இணையின் நோக்கிக்
குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று
இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோள் நிலைமை காண்மின்
விளக்கவுரை :
919. கோல நெடுங் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்பப்
பீலி மஞ்ஞை நோக்கிப் பேடை மயில் என்று எண்ணி
ஆலிச் சென்று புல்லி அன்மை கண்டு நாணிச்
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின்
விளக்கவுரை :
920. மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழக் காணாள்
அன்னப் பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய்
என்னை அடிமை வேண்டின் நாடித் தா என்று இறைஞ்சிப்
பொன் அம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்மின்
விளக்கவுரை :