சீவக சிந்தாமணி 881 - 885 of 3145 பாடல்கள்
881. சீர்தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து
வார்தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கைக் காட்ட மைந்தர்
ஏர்தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம்போர்க்
கார்தங்கு வண்கைக் கழல் சீவகன் காண்மின் என்றார்
விளக்கவுரை :
882. வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான் தனைச் சூழ மற்றப்
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில்
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மாமதித் தோற்றம் ஒத்தே
விளக்கவுரை :
[ads-post]
883. காளை சீவகன் கட்டியங் காரனைத்
தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல்
வாளை வவ்விய கண்ணியர் வார் கழல்
தாளை ஏத்துபு தம் குறை செப்பினார்
விளக்கவுரை :
884. சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கருங் குழல்
வண்ண மாலையினீர் எனக் கூறினான்
விளக்கவுரை :
885. மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை
பொற்ற சுண்ணம் எனப் புகழ்ந்தார் நம்பி
கற்றதும் அவர் தங்களொடே கொலோ
விளக்கவுரை :