சீவக சிந்தாமணி 816 - 820 of 3145 பாடல்கள்
816. குழை உடை முகத்தினாள் கண் கோணைப் போர் செய்த மன்னர்
மழையிடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர்
முழையுடைச் சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார்
விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே.
விளக்கவுரை :
817. பார்மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார்
போர்முகக் களிற்று வெண்கோடு உழுத செஞ் சால் கொள் மார்பின்
சீர் முகத் தோழர் சூழச் சீவகன் திருவின் சாயல்
வார் முக முலையினாளை மனை வயின் கொண்டு புக்கான்
விளக்கவுரை :
[ads-post]
818. நெய்க் கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பத்தல் கிடத்தப் பட்டார்
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப் பட்டார்
மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மா நிலத்து உகுக்கப் பட்டார்
கைக் கிழி கொடுக்கப் பட்டார் கலம் பல நல்கப் பட்டார்
விளக்கவுரை :
819. முது மரப் பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு
இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரவை மார்பின் நெய்க் கிழி பயிலச் சேர்த்தி
நுதி மயிர்த் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே
விளக்கவுரை :
820. பார் கெழு பைம் பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி
ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கித்
தார் கெழு மின்னு வீசித் தனிவடம் திளைக்கும் மார்பன்
போர் கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கினானே
விளக்கவுரை :