சீவக சிந்தாமணி 781 - 785 of 3145 பாடல்கள்
781. மறப் படை பசித்தன வயிறு இன்று ஆர்க எனக்
குறைத்தனர் குஞ்சரம் கூந்தல் மாத் துணித்து
இறக்கினரோடு தேர் மைந்தர் இன் உயிர்
துறக்கம் போய்ப் புகுக எனத் துணிய நூறினார்
விளக்கவுரை :
782. ஆற்றுவீர் வம்மின் எம்மோடு ஆண்மை மேம்படீஇய என்பார்
ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார்
கூற்றம் போல் கொடிய யானைக் கோடு உழுது அகன்ற மார்பம்
கீற்றுப் பட்டு அழகிதாகக் கிடக்க எனக் கொடுத்து நிற்பார்
விளக்கவுரை :
[ads-post]
783. கழித்து வாள் அமலை ஆடிக் காட்டுவார் கண்கள் செந்தீ
விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார்
தெழித்துத் தேர்க் கயிறு வாளால் அரிந்திட்டுப் புரவி போக்கிப்
பழிப்பு இல கொணர்ந்து பூட்டு பாக நீ என்று நிற்பார்
விளக்கவுரை :
784. ஐங் கதிக் கலினப் பாய் மாச் சிறிது போர் களை ஈது என்பார்
வெம் கதிர் வேலில் சுட்டி வேந்து எதிர் கொண்டு நிற்பார்
நங்கை கல்யாணம் நன்றே நமக்கு என நக்கு நிற்பார்
சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன் மாரே
விளக்கவுரை :
785. ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி
இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவுத் தோளார்
விரும்புவார் வேழ வேல் போர் நூற்றுவர் நூறு கோடிக்கு
இருந்தனம் வருக என்பார் இன்னணம் ஆயினாரே
விளக்கவுரை :