சீவக சிந்தாமணி 771 - 775 of 3145 பாடல்கள்
771. தம்முடைப் பண்டம் தன்னைக் கொடுத்து அவர் உடைமை கோடல்
எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே
அம்முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து
நும்முடைத் திருவும் தேசும் நோக்குமின் கொள்வல் என்றான்
விளக்கவுரை :
772. மட்டு உலாம் தாரினாய் நின் வனப்பினோடு இளமை கல்வி
கெட்டு உலாய்ச் சிலம்பு செம் பொன் கிண்கிணி மகளிர் கோங்க
மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த அகலத்துச் சரங்கள் மூழ்கப்
பட்டு உலாய்க் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார்
விளக்கவுரை :
[ads-post]
773. எரிசுடர்ப் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்கப்
பொருபடை மன்னர் நுங்கள் புறக் கொடை கண்டு மற்று இம்
முருகு உடைக் குழலினாள் தன் முகிழ் முலை கலப்பல் அன்றேல்
இருசுடர் வழங்கும் வையத்து என்பெயர் கெடுக என்றான்
விளக்கவுரை :
774. ஆள் மர வாள் நிலத்து அப்பு வேல் செய்முள்
காண் வரு காட்டு இனக் களிற்று நீள் வரை
நீள் நில வேந்து எனும் வேழப் பேர் இனம்
பூண் முலைப் பிடிக்கு அவாய்ப் போர் செய்குற்றவே
விளக்கவுரை :
775. தாழ் இரும் தடக்கையும் மருப்பும் தம்பியர்
தோழர் தன் தாள்களாச் சொரியும் மும்மதம்
ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக
ஏழுயர் போதகம் இனத்தொடு ஏற்றதே
விளக்கவுரை :