சீவக சிந்தாமணி 616 - 620 of 3145 பாடல்கள்
616. உருக்கு அமைந்து எரியும் செம் பொன் ஓர் ஐவில் அகலம் ஆகத்
திருக் குழல் மடந்தை செல்லத் திரு நிலம் திருத்திப் பின்னர்
விரைத் தகு நான நீரால் வெண் நிறப் பொடியை மாற்றிப்
பரப்பினர் படு வண்டு ஆர்ப்பப் பல் மலர் பக்கம் எல்லாம்
விளக்கவுரை :
617. விலை வரம்பு அறிதல் இல்லா வெண் துகில் அடுத்து வீதி
அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆகப்
பல படப் பரப்பிப் பாவை மெல் அடிப் பரிவு தீர
நில வரை தன் அனாரை நிதியினால் வறுமை செய்தான்
விளக்கவுரை :
[ads-post]
618. மண்டலம் நிறைந்த மாசு இல்மதிப் புடை வியாழம் போனறு ஓர்
குண்டலம் இலங்க நின்ற கொடியினைக் குறுகித் தோழி
விண்டு அலர் கோதை விம்மும் விரைக் குழல் தொழுது நீவிப்
பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அறப் பணிந்து சொன்னாள்
விளக்கவுரை :
619. எரிமணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது கொல் என்னப்
புரிமணி சுமந்த பொன் பூண் பொறுக்கலா நுசுப்பில் பாவை
திருமணி வீணைக் குன்றத்து இழிந்த தீம் பாலை நீத்தத்து
அருமுடி அரசர் ஆழ்வர் அம்மனை அறிவல் என்றாள்
விளக்கவுரை :
620. மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார்
ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளிமதி ஒண் பொன் ஆட்சித்
தௌ நிற விசும்பில் நின்ற தெளிமதி முகத்து நங்கை
கண்ணிய வீணை வாள் போர்க் கலாம் இன்று காண்டும் என்றே
விளக்கவுரை :