சீவக சிந்தாமணி 561 - 565 of 3145 பாடல்கள்
561. காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணிக் குடையொடு ஏந்தித்
தாம் பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப்
பாம்பு பைத்த அனைய அல்குல் பல்கலை மிழற்ற ஏகி
ஆம்பல் நாறு அமுதச் செவ்வாய் அரசனைத் தொழுது நின்றாள்
விளக்கவுரை :
562. அடிக் கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம்
முடிக் கலம் சொரியச் சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னுக்
கொடிப் பல நுடங்கி ஆங்குத் தோழியர் குழாத்துள் நிற்ப
அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான்
விளக்கவுரை :
[ads-post]
563. வலம்புரி ஈன்ற முத்தம் மண்மிசை அவர்கட்கு அல்லால்
வலம்பரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன
நலம் புரிந்த அனைய காதல் தேவி தன் நவையை நீங்கக்
குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே
விளக்கவுரை :
564. இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை
பொன் புனை யூகம் மந்தி பொறி மயிர்ப் புறவம் பொன்னார்
மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி ஆகத்
தன் புறம் சூழப் போகித் தளிர் இயல் விமானம் சேர்ந்தாள்
விளக்கவுரை :
565. வெற்றி வேல் மணிமுடிக், கொற்றவன் ஒரு மகள்
அற்றம் இல் பெரும் படைச், சுற்றமோடு இயங்கினாள்
விளக்கவுரை :