சீவக சிந்தாமணி 551 - 555 of 3145 பாடல்கள்
551. விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே
அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அருமணி முகிழ்த்தவே போல்
இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னின்
துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே
விளக்கவுரை :
552. நின் மகள் இவளை நீயே நின் பதிக் கொண்டு போகி
இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக
அன்னவற்கு உரியள் என்ன அடிப் பணி செய்வல் என்றான்
தன் அமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்கது என்றாள்
விளக்கவுரை :
[ads-post]
553. முனிவு அரும் போக பூமிப் போகம் முட்டாது பெற்றும்
தனியவர் ஆகி வாழ்தல் சாதுயர் அதனின் இல்லை
கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின்
பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான்
விளக்கவுரை :
554. நூல் படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்து யானும்
வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன்
சேல் கடை மதர்வை நோக்கின் சில்லரித் தடங் கண் நங்கை
பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார்
விளக்கவுரை :
555. படைப்பு அருங் கற்பினாள் தன் பாவையைப் பரிவு நீக்கிக்
கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும்
விடைப்பு அருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித்
தொடுத்து அலர் கோதை வீணா பதிக்கு இது சொல்லினானே
விளக்கவுரை :