சீவக சிந்தாமணி 526 - 530 of 3145 பாடல்கள்
526. மேகமே மிடைந்து தாழ இருள் கொண்ட வெள்ளிக் குன்றம்
மாகத்து விளங்கித் தோன்றும் வனப்பு நாம் வகுக்கல் உற்றால்
நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்கக் கவ்விப்
பாகமே விழுங்கப் பட்ட பால் மதி போன்றது அன்றே
விளக்கவுரை :
527. துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன்
விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம்
அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணி நகர் ஆக்கி மேலால்
இளங் கதிரப் பருதி சூட்டி இயற்றியது என்னல் ஆமே
விளக்கவுரை :
[ads-post]
528. பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல்
செங் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர்
கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல்
தங்குகின்றது போல் தகை சான்றதே
விளக்கவுரை :
529. கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூங் கொடி
மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று
உடங்கு வெண்மதி உள் குளிரத் தம்
குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்றவே
விளக்கவுரை :
530. திருவ மேகலை தௌளரிக் கிண் கிணி
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா
உருவம் யார் உடையார் என்று ஒளி நகர்
அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே
விளக்கவுரை :