சீவக சிந்தாமணி 481 - 485 of 3145 பாடல்கள்
481. சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்.
விளக்கவுரை :
482. குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.
விளக்கவுரை :
[ads-post]
பதுமுகனுக்கு மணம்புரிவிக்க, சீவகன் இசைந்து கோவிந்தையை ஏற்றல்
483. கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே.
விளக்கவுரை :
484. கோட்டு இளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டுஇள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான்.
விளக்கவுரை :
485. தேன் சொரி முல்லைக் கண்ணிச் செந் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க்
கான் சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக என்றான்.
விளக்கவுரை :