சீவக சிந்தாமணி 461 - 465 of 3145 பாடல்கள்
461. வாள் அரம் துடைத்த வைவேல் இரண்டு உடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல்
காளைதன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே.
விளக்கவுரை :
462. வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும்
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல்
பட அரவு அல்குலாரைப் பயந்தன மாடம் எல்லாம்.
விளக்கவுரை :
[ads-post]
463. மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறிப்
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண் என்
தாது உகு பிணையல் வீசிச் சாந்து கொண்டு எறிந்து நிற்பார்.
விளக்கவுரை :
464. கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்ப்
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல்
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்கண் கண்டாம்
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார்.
விளக்கவுரை :
465. செம்மலைப் பயந்த நல் தாய் செய்தவம் உடையாள் என்பார்
எம் மலைத் தவம் செய்தாள் கொல் எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித்
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார்.
விளக்கவுரை :