சீவக சிந்தாமணி 231 - 235 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 231 - 235 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

231. கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக்
     கண் பசலை பூத்த காமம்
விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள்
     பெய்து இருந்த பொன் செப்பே போல்
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று
     ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல்
     நங்கை நலம் தொலைந்ததே.

விளக்கவுரை :

சச்சந்தன் கவலையுறுதல்


232. தூம்பு உடை நெடுங் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
தேம்புடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக
ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான்.

விளக்கவுரை :



[ads-post]

'எந்திர ஊர்தியைச் செய்க' என அறிவு என்னும் அமைச்சன் கூறல்


233. காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்.

விளக்கவுரை :

சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை 'விசைப் பொறி ஒன்றைச் செய்க' என அவனும் செய்தல்


234. அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான்.

விளக்கவுரை :

235. பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே.

விளக்கவுரை :
Powered by Blogger.