மணிமேகலை 4821 - 4840 of 4856 அடிகள்
4821. தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும்
அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும்
செய்வானொடு கோட்பாடு இலை என்றும்
எய்து காரணத்து ஆம் காரியம் என்றும்
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினா விடை நான்கு உள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத்
"தோன்றியது கெடுமோ? கெடாதோ?" என்றால்
விளக்கவுரை :
[ads-post]
4831. "கேடு உண்டு" என்றல் துணிந்து சொலல் ஆகும்
"செத்தான் பிறப்பானோ? பிறவானோ?"
என்று செப்பின்
"பற்று இறந்தானோ? அல் மகனோ?" எனல்
மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர்
வினாவின் விடுத்தல் "முட்டை முந்திற்றோ
பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்"
என்றால் "எம் முட்டைக்கு எப் பனை" என்றல்
வாய் வாளாமை "ஆகாயப் பூப்
பழைதோ, புதிதோ?" என்று புகல்வான்
விளக்கவுரை :