மணிமேகலை 4781 - 4800 of 4856 அடிகள்
4781. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன
அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச்
விளக்கவுரை :
[ads-post]
4791. சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இந்
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும்
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல்
இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச்
சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு
விளக்கவுரை :