மணிமேகலை 4701 - 4720 of 4856 அடிகள்
4701. ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவல் இல் துன்பம் தலைவரும் என்ப
ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி
விளக்கவுரை :
[ads-post]
4711. பேதைமை மீள செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருஉரு மீளும்
அருஉரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீள பற்று மீளும்
பற்று மீள கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
விளக்கவுரை :