மணிமேகலை 4561 - 4580 of 4856 அடிகள்
4561. உபயா வியாவிருத்தி ஆவது
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்"
என்ற இடத்து "யாதொன்று யாதொன்று அநித்தம்
மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல்" என
வைதன்மிய திட்டாந்தம் காட்டில்
"ஆகாசம் பொருள் அல்ல" என்பானுக்கு
ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளாமையும் இலையாகும்
அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம்
விளக்கவுரை :
[ads-post]
4571. இல்லா இடத்துச் சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் "சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால்" என்றால்
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப்படுவது அல்லாது அதுவும்
அன்று" எனும் இவ் வெதிரேகம் தெரியச்
சொல்லாது "குடத்தின்கண்ணே பண்ணப்
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்"
என்னின் வெதிரேகம் தெரியாது
விபரீத வெதிரேகம் ஆவது
விளக்கவுரை :