மணிமேகலை 4381 - 4400 of 4856 அடிகள்
4381. பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று
"அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ?
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ?" எனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
"சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின்
ஒத்தது" எனின் அச் செயலிடைத் தோன்றற்குச்
விளக்கவுரை :
[ads-post]
4391. சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல்" எனச் சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும் அத்
விளக்கவுரை :