மணிமேகலை 4241 - 4260 of 4856 அடிகள்
4241. நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
"ஒத்த அநித்தம் கட ஆதி போல்" எனல்
விபக்கம் விளம்பில் "யாதொன்று யாதொன்று
அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது
விளக்கவுரை :
[ads-post]
4251. ஆ அகாசம் போல்" என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க
ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என
சாதன்மியம் எனப்படுவது தானே
"அநித்தம் கட ஆதி அன்னுவயத்து" என்கை
வைதன்மிய திட்டாந்தம் "சாத்தியம்
விளக்கவுரை :