மணிமேகலை 3681 - 3700 of 4856 அடிகள்
3681. அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன்
'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர்
தேவன் இட்ட முட்டை' என்றனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன்
'கற்பம் கை சந்தம் கால் எண் கண்
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும்
விளக்கவுரை :
[ads-post]
3691. வேதியன் உரையின் விதியும் கேட்டு
'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற
எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என
ஆசீவக நூல் அறிந்த புராணனை
'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என
'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
விளக்கவுரை :