மணிமேகலை 3141 - 3160 of 4856 அடிகள்
3141. மணிமேகலை தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக்
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழாக் கோள் மறவேல்" என்று
மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக்
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறுமாயின்
மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என
விளக்கவுரை :
[ads-post]
3151. அஞ்சினேன் அரசன் தேவி!' என்று ஏத்தி
'நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை
என் மனைத் தருக' என இராசமாதேவி
'கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை
புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும்' என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
விளக்கவுரை :