சிலப்பதிகாரம் 3801 - 3820 of 5288 அடிகள்
3801. ஒன்றித் தோன்றும்
தனிக்கோள் நிலைமையும்
வடஆரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்குகாணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில்
துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனோ டொருபரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று.
விளக்கவுரை :
[ads-post]
3. வஞ்சிக் காண்டம்
26. குன்றக் குரவை
உரைப்பாட்டு மடை
3811. குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி
அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக்
கணவனையங்கு இழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
என்றலும் இறைஞ்சியஞ் இணைவளைக்கை எதிர்கூப்பி
நின்றஎல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்
இவள்போலும் நங்குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின்
விளக்கவுரை :