சிலப்பதிகாரம் 3501 - 3520 of 5288 அடிகள்
3501. பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில்
உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே
நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ்
சூழொளித் தாலு மியாழும் ஏந்தி
விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து
மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து
விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு
உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக்
கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளக்கவுரை :
[ads-post]
3511. விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்
கருவிளை புரையு மேனிய னரியொடு
வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக்
காழகம் செறிந்த உடையினன் காழகில்
சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவிற் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச்
செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
விளக்கவுரை :