சீவக சிந்தாமணி 271 - 275 of 3145 பாடல்கள்
271. வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர விம் உயிர்த்து இனையை ஆதல்
ஒண் தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான்.
விளக்கவுரை :
272. உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளஞ் சிங்கம் அன்னான்.
விளக்கவுரை :
[ads-post]
விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்
273. என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆர் உயிர்க் கிழத்தி தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறித்
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்.
விளக்கவுரை :
சச்சந்தன் கோபங்கொள்ளல்
274. நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான்.
விளக்கவுரை :
சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்
275. முழை முகத்து இடி அரி வளைத்த அன்ன மள்ளரில்
குழை முகப் புரிசையுள் குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல் இடை
மழை முகத்த குஞ்சரம் வாரிஉள் வளைத்தவே.
விளக்கவுரை :