சீவக சிந்தாமணி 266 - 270 of 3145 பாடல்கள்
266. புலிப் பொறிப் போர்வை நீக்கிப் பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலிக் கழல் மன்னர் உட்கும் உருச் சுடர் வாளை நோக்கிக்
கலிக்கு இறை ஆய நெஞ்சினி கட்டியங் காரன் நம்மேல்
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான்.
விளக்கவுரை :
விசயை துன்புறுதல்
567. நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்னக்
கொங்கு அலர் கோதை மாழ்கிக் குழை முகம் புடைத்து வீழ்ந்து
செங் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள்.
விளக்கவுரை :
[ads-post]
268. மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்திப்
புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப் பொம்மல் வெம் முலையினாட்குச்
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே.
விளக்கவுரை :
269. சாதலும் பிறத்தல் தானும் தம் வினைப் பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளைத் தோளி என்றான்.
விளக்கவுரை :
270. தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச்
செல்லும் அக் கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா.
விளக்கவுரை :