மணிமேகலை 2801 - 2820 of 4856 அடிகள்
2801. "மைத்துனன் முறைமையால் யாழோர் மண
வினைக்குஒத்தனர்" என்றே ஊர் முழுது அலர் எழ
புனையா ஓவியம் புறம் போந்தென்ன
மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை
உலக அறவியினூடு சென்று ஏறி
"இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்!
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ" என
"மா நகருள்ளீர்! மழை தரும் இவள்" என
நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும்
"தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின்
விளக்கவுரை :
[ads-post]
2811. மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன்
இப் பிறப்பு இவனொடும் கூடேன்" என்றே
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின்
தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி
"தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய்" என
நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத்
விளக்கவுரை :